Friday, January 30, 2009

சென்னையில் இலங்கை தூதரகத்தைத் தாக்க முயற்சி - 36 மாணவர்கள் கைது

Rekha - Is She A Witch? By [Arjun Mukherjee -

சென்னையில் இலங்கை தூதரகத்தைத் தாக்க முயற்சி - 36 மாணவர்கள் கைது
சென்னை: இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய சட்டக் கல்லூரி மாணவர்கள் திடீரென இலங்கை தூதரகத்தை தாக்க முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த வலியுறுத்தியும், அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இலங்கை தூதரகம் இருக்கும் டிடிகே சாலையில் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் அவர்கள்



அரசியல் வாழ்வு நாசமானாலும் பரவாயில்லை - ஈழத் தமிழர்களை காக்க போராடுவோம்: வைகோ
சென்னை: எங்கள் அரசியல் வாழ்வு அடியோடு நாசமாகி போனாலும் பரவாயில்லை, ஈழத் தமிழர்களை காப்பதற்கு நாங்கள் போராடுவோம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வைகோ



புதுச்சேரியில் குண்டு வீசி கூலித் தொழிலாளி கொலை !
புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டையில் கூலித் தொழிலாளி ஒருவர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.கடந்த நவம்பர் 5ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்றால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சாந்தமூர்த்தி



விசுவமடுவை பிடித்தது இலங்கை ராணுவம்
முல்லைத்தீவு:விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த விசுவமடு பகுதியை முற்றிலுமாக தங்கள்வசம் கொண்டு வந்துள்ளதாகவும்,அங்கிருந்த விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான நீர்முழ்கி கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.புலிகளின் கட்டுப்பாட்டில் வடக்குப் பகுதியில் இருந்த அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய ராணுவம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக கடற்புலிகளின் தலைநகரமாக கருதப்பட்ட முல்லைத்தீவை பிடித்தது.தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு,



லோக்சபா தேர்தலுக்கு தேசிய அளவில் கூட்டணி இல்லை: காங்.
டெல்லி: லோக் சபா தேர்தலுக்கு தேசிய அளவிலான கூட்டணியை அமைப்பதில்லை என காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது. இதன் மூலம் சில கட்சிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சீட் கேட்பதைத் தவிர்க்கலாம் என காங்கிரஸ் கணக்குப் போட்டுள்ளது.டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.லோக்சபா தேர்தல் கூட்டணி, தேர்தல்



பணவீக்கம் 5.64 சதவீதமாக உயர்வு
டெல்லி: நாட்டின் பணவீக்கம் இரண்டாவது வாரமாக ஏறுமுகத்தில் உள்ளது. இந்த வாரம் 5.64 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 5.60 சதவீதமாக இருந்தது.இப்போது ஜனவரி 17-ம் தேதியுடன் முடி‌வடைந்த வாரத்திற்கு எடுக்கப்பட்ட கணக்கின்படி பணவீக்கம் 5.64 சதவீதமாக உயர்ந்துள்ளது.பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் முதலீட்டுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாலேயே பணவீக்கம் உயர்ந்துள்ளதாக



பிப். 6ல் நான் கடவுள்!
பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள பாலாவின் நான் கடவுள் திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. வாசன் விஷுவல் வென்சர்ஸ் சார்பில் சீனிவாசன் தயாரித்துள்ள இந்த பிரமாண்டமான படைப்பை பிரமிட் சாய்மீரா நிறுவனம் உலகெங்கும் வெளியிடுகிறது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகத் தயாரிப்பிலிருந்துவரும் திரைப்படம் பாலாவின் நான் கடவுள். இதன் முதல் தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன்.ஆனால் பாலாவின்



இனி இலவச கலர் டி.வி காஸ் அடுப்பு கிடைக்குமா? காங். கேள்வி
சென்னை: தமிழகத்தில் இன்னும் பலருக்கு இலவச கலர் டி.வி, காஸ் அடுப்பு ஆகியவை கிடைக்கவில்லை. அது கிடைக்குமா என காங்கிரஸ் கட்சி சட்டசபை விவாதத்தில் கேள்வி எழுப்பியது.தமிழக சட்டமன்றத்தில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று விவாதம் நடந்தது.அப்போது சேரன்மகாதேவி காங்கிரஸ் எம்எல்ஏ வேல்துரை பேசுகையில்,எனது தொகுதியில் பாதி இடங்களில் இலவச கலர் டி.வி,



'கோவா'வில் அமன்டா?
ஜெஸிகா ஆல்பா கோவா படத்தில் நடிக்க ஏகப்பட்ட பணம் கேட்டதால் அவரை கைகழுவி விட்ட கோவா பட யூனிட் தற்போது மம்மா மியா படப் புகழ் அமன்டா சிங்பிரட்டை அணுகியுள்ளதாக தெரிகிறது.வெங்கட் பிரபு அடுத்து இயக்கவுள்ள படம் கோவா. இப்படத்தில் மொத்தம் நான்கு நாயகர்கள். ஜெய், வைபவ், பிரேம்ஜி, சிவா ஆகியோர் அவர்கள். 3 நாயகிகள். அதில்



இங்குள்ள தமிழர்களின் உயிரும் முக்கியம் - அதை மாய்க்க வேண்டாம்: ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை: இலங்கைத் தமிழர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல தமிழகத்தில் உள்ள தமிழர்களின் உயிரும் முக்கியம். எனவே யாரும் உயிரை மாய்க்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னையில் பெண்ணே நீ இதழின் ஊழியரான முத்துக்குமார் என்ற இளைஞர் இன்று காலை சாஸ்திரி பவன் வளாகத்தில் இலங்கைத் தமிழர்களைக் காக்க


Seja o primeiro a comentar

Post a Comment

Followers

  ©Tamil Movies and Dramas. Template by Dicas Blogger.

TOPO