Sunday, August 2, 2009

சென்னையில் புது ட்ரெண்ட்: பழைய வீட்டுக்கு புதுவீடு!

சென்னை: பழைய நகையைக் கொடுத்து புது நகை வாங்குவதைப் பார்த்திருப்பீர்கள்... பழைய கார் கொடுத்துவிட்டு புதுக்கார் வாங்குவதைப் பார்த்திருப்பீர்கள்.பழைய வீட்டைக் கொடுத்துவிட்டு புதிய வீடு வாங்கிப் பார்த்திருக்கிறீர்களா...?இனி பார்ப்பீர்கள்... அதுவும் நம்ம சிங்காரச் சென்னையிலேயே!எல் அண்ட் டி நிறுவனத்தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி அருண் எக்ஸெல்லோ ரியல்டி, இந்த வேலையில் இறங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, more

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் ஊரக வளர்ச்சித்துறையின் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ககன்தீப் சிங்பேடி ஆய்வு செய்த போது பணியில்அலட்சியமாக இருந்த இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் ஊரக வளர்ச்சித்துறையின் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் ககன்தீப் சிங்பேடி ஆய்வு செய்தார்.அப்போது, ஒரத்தநாடு யூனியன் ஆழிவாய்கால் பஞ்சாயத்து தெற்கு நத்தம் more

சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் இயக்கப்படவுள்ள மகளிர் சிறப்பு ரயில்களை ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.மத்திய ரயில்வே பட்ஜெட்டில் முக்கிய நகரங்களில் மகளிர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி சென்னையில், கடற்கரை முதல் தாம்பரம், வேளச்சேரி, அரக்கோணத்திற்கு பீக் அவர்ஸ் எனப்படும் காலை மற்றும் மாலை more

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆலோசனை நடத்தினார்.நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள், பாதுகாப்பு ஆயத்த நிலை குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முப்படைகளின் more

சென்னை: சென்னையிலிருந்து துபாய்க்குப் புறப்பட வேண்டிய விமானம் கோளாறு காரணமாக கிளம்பத் தாமதமானாதால், 390 பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.சென்னையிலிருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு துபாய் செல்லும் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. விமானத்தில் ஏற 390 பயணிகள் காத்திருந்தனர்.ஆனால், விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருக்குமாறு கூறிய அதிகாரிகள், அதுவரை பயணிகளை ஓய்வறையில் அமருமாறு கூறி அமர வைத்தனர்.ஆனால் more

டெல்லி: ஆகஸ்டு 18-ந்தேதி முதல் விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என விமான நிறுவனங்கள் அறிவித்திருப்பதை வாபஸ் பெறாவிட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரஃபுல் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.'விமான நிறுவனங்கள் சந்தித்து வரும் சிரமங்களை அரசு புரிந்துகொண்டுள்ளது. எனினும் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையையும் அரசு ஆதரிக்காது' என படேல் more

கோலாலம்பூர்: மலேசியாவின் அடக்குமுறைச் சட்டமான உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரி நேற்று அந்த நாட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய மிகப் பெரிய பேரணியில், பெரும் வன்முறை மூண்டது. 438 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.மலேசிய அரசின் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், இந்தியாவில் இருந்த பொடா சட்டத்தை விட மோசமானது. இந்த more

கடையநல்லூர்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி வாசலை பூட்டிய போலீசாரை கண்டித்து கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள எஸ்பி பட்டணத்தில் தவ்ஹீத் ஜமாத்திற்கு சொந்தமான பள்ளி வாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு பள்ளிவாசலுக்கு பூட்டு போட்டனர்.இதனை more

யாங்கோன்: மியான்மர் ஜனநாயக கட்சித் தலைவி ஆங் சான் சூகியி மீதான ராணுவ கோர்ட்டின் தீர்ப்பு ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த விசாரணையின் முடிவில் ஆங் சானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. தற்போது ஆங் சான் சூகியி வீட்டுக் காவலில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த மே மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த more

மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அரசியலில் குதிக்க ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் அவர் போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்தில் தனது பள்ளித் தோழரும், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரருமான சச்சின் குறித்து சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் காம்ப்ளி.இந்த நிலையில் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியுள்ளார்.இதுகுறித்து more

Seja o primeiro a comentar

Post a Comment

Followers

  ©Tamil Movies and Dramas. Template by Dicas Blogger.

TOPO